Monday, March 06, 2006

போகிகள் இனி எழுதலாம் "கல்வெட்டை கண்டுபிடிங்க"

  Posted by Picasa

நிகழ்காலத்தை அடகுவைத்து
உன்னுடனான
கடந்தகாலத்தை மீட்டுக்கொண்டிருக்கிறேன்
நினைவுகளில்!!

திடிரென்று கேட்டதால்
குழம்பிவிட்டேன்
நில்
பார்த்துவிட்டுச் சொல்கிறேன்
என் பெயரை!!

உனைப் பார்த்ததும்
கண்ணில் தெரியும் காதல்
நீ பார்த்ததும்
ஓடி ஒழிந்து கொள்கிறது
மனதில்!!

உன்
கண்ணீர் துளிகள் விழுந்ததில்
சிதறியது
மனது!!

திருவிழாவில்
தொலைந்த குழந்தையாக
தேடி அலைகிறேன்
உன்னை
கடந்துவந்த பாதையில்!!

புதிதாய் வாங்கும்
பேனாக்கள்,
உன் பெயரை எழுதவே
கற்றுக்கொள்கின்றன
முதலில்
நான்
மறந்துவிட்டபோதிலும்

நிராகரிப்புக்கு பயந்து
தற்கொலை செய்துகொண்டது
அதனால் தான் என்னவோ
உனை சுற்றியே
அலைந்து கொண்டிருக்கிறது
காதல்

ஏனென்று கேட்காமல்
உயில் எழுதிவை
நான் கொண்டுவரும் தாளில்தான்
சிதை மூட்டவேண்டுமென்று
கொண்டுவருகிறேன்
உனக்கான கவிதைகளை

- பிரேம்

3 Comments:

Blogger J S Gnanasekar said...

யோவ், ஓங்க தொல்ல தாங்க முடியாமத்தானே போகி செவனேன்னு இருக்கான். அவன ஏன்யா வம்புக்கு இழுக்கிற. அதுவும் ஒரு காதல் கவிதையில! எதிர்க்கட்சிகாரன் பாத்தா என்ன நெனப்பான்? சரி நேயர் விருப்பத்தை நிறைவு செய்கிறேன்.



யோகி சொன்னான்.
கல்வெட்டைக்
கண்டுபிடிங்க.

போகி சொன்னான்.
நிகழ்காலத்தில்
தொலைத்துவிட்டு,
வருங்காலத்தில்
காட்சியில் வைத்து,
இறந்தகாலப்
பெருமை பேச

நிகழ்காலத்திலேயே
தொலைத்துப் போக
கண்டுபிடியுங்கள்
கல்வெட்டை!

நிகழ்கால உயில்களை
வருங்காலச் சிதைகளாக்க....

அட!
எங்கே போனார்
இந்த யோகி?

கடலைக் கண்டுபிடிக்க
நதியிடம் வழி கேட்டுவிட்டு
விரல் சுட்டும் முன்னே
சட்டென எங்கே போனார்
இந்த யோகி?

யாராவது அவரைப் பார்த்தால் ஒன்றைமட்டும் சொல்லுங்கள்
'யமுனைக்குத் தெரியாது
கடலின் முகவரி' என்று!

-ஞானசேகர்

1:01 PM  
Blogger sathesh said...

ரொம்ப நல்லாயிருக்கு பிரேம்...

9:14 PM  
Blogger பழனி said...

திடிரென்று கேட்டதால்
குழம்பிவிட்டேன்
நில்
பார்த்துவிட்டுச் சொல்கிறேன்
என் பெயரை


வரிகள் நல்ல இருக்கு ..
நல்ல கவிதை ..!!

1:05 AM  

Post a Comment

<< Home