Tuesday, December 13, 2005

பிரிவு

மறந்திராத
stay in touch
i will miss u
இப்படி பிரிவுக்கான
எத்தனையோ வரிகளில்
ஒன்றுகூட உச்சரிக்கப்படாமல்
நிகழ்ந்துவிட்டது
நம் பிரிவு

நிதர்சனம் உடைத்த கண்ணாடியில்
முகம் பார்த்து
தன்னைத்தானே
அடையாளம் காணமுடியாமல் தவிக்கிறது
காதல்

உன் பெயரை
சப்தமில்லாமல் உரக்க அழைத்தில்
வலிக்கிறது மனது
வலியினூடே ரகசியமாய்
கேட்க நினைக்கிறது
"என் நினைவுகள் உனக்கு வருமா??"

இயல்பாய்....
பிரிந்து போனாய்
உன் நினைவுகளை விட்டுவிட்டு
பிரிவதற்கான கடைசி நேரங்களில்
என் கண்ணில் நிலைகுத்தி நின்ற
உன் பார்வை
'புரிகிறது' என்று சொன்னதாய்
புரிந்துகொள்கிறது மனது.

நீ இல்லாத போதும்
நினைவுகளில் உன் இருப்பை
கண்காணித்துக் கொண்டே இருக்கிறது
உன் கண்கள்

இன்று இல்லாவிட்டாலும்
என்றைக்காவது சொல்லிப்போ..
புரிந்து கொண்டதாய்
இல்லையென்றாலும்
தெரிந்து கொண்டதாய்
என் காதலை

- பிரேம்

5 Comments:

Blogger J S Gnanasekar said...

அப்பாடா..... 60 நாட்களுக்குப் பிறகு, இதோ மீண்டும் கல்லிருந்து கசிகிறது ஈரம், கண்ணீராய்.

கல்வெட்டு, நன்றாக இருக்கிறது. கவிதை எழுதுகிற அளவுக்கு, அப்படி என்ன சோகம்?

கல்வெட்டு, தொடந்து 9 பதிவுகளாக நான் காதலைப் பற்றி எழுதவே இல்லை. நமக்கு எதுக்கு இந்த தெரியாத வேலையின்னு கொஞ்ச நாளைக்கு நிறுத்தி வெச்சிருக்கேன். திரும்ப தொடருவம்ல. நீயும் "இருட்டு", "ஊமையாய் நான்" போன்ற கவிதைகள் போலவே "காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு" செய்தால் நன்றாய் இருக்கும் என நினைக்கிறேன்.

யோவ், இது ஒரு நண்பனின் ஆசைதான். நீ பாட்டுக்கு "தலைப்புகளில் சிக்குவதில்லை நண்பர்கள்"னு ஒரு கவிதை எழுதிராத.

-ஞானசேகர்

2:53 PM  
Blogger premkalvettu said...

சரி சொல்லிட்டல்ல
எழுதிருவோம்.....வேல
bend
எடுக்கிறாங்கப்பா....
போய் படுத்தா அவ்வளவு தான்..அத்தனை வரிகளும் செத்துப்போகிறது

9:05 PM  
Blogger சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

ரொம்ப உணர்ச்சி வசப்படறாய்ங்கப்பா

9:13 AM  
Blogger premkalvettu said...

என்ன பண்ணுறது நம்ம பொழப்பு
கடைசிவரைக்கும் இப்படியே இருந்திரும் போல இருக்கு

10:26 AM  
Blogger J S Gnanasekar said...

//சரி சொல்லிட்டல்ல
எழுதிருவோம்.....வேல
bend
எடுக்கிறாங்கப்பா....
போய் படுத்தா அவ்வளவு தான்..அத்தனை வரிகளும் செத்துப்போகிறது//

இதக்கூடா ஏன்யா கவித மாதிரி மடிச்சு எழுதியிருக்க?

இங்கேயும் அதே நெலமதான். "நானும் எவ்வளவு நேரம்தான் வேல பாக்குறது மாதிரி நடிக்கிறது? வேணாம் அழுதுருவேன்."

//என்ன பண்ணுறது நம்ம பொழப்பு
கடைசிவரைக்கும் இப்படியே இருந்திரும் போல இருக்கு//

காலப்போக்கில் காயம் எல்லாம் மறந்துபோகும் மாயங்கள்.

-ஞானசேகர்

11:19 AM  

Post a Comment

<< Home