Friday, February 03, 2006

காணவில்லை

 


hmmmm...காணவில்லை
என்ன செய்வது
எங்கு தேடியும் காணவில்லை,
உன் நினைவுகளின்
சாட்சிகள்

எங்கே போயின
எனக்கான உன் முகவரியும்
உனக்கான என் இதயவரியும்
சுமந்த குறிப்பேடுகள்

எல்லாம் தொலைந்துவிட்டது
உன் முகவரிகூட
இல்லாமல் நிற்கிறேன்.

பாவம்
அநாதையாக அலைகிறது
மனது


எனக்காக நீ எழுதிய
கடிதங்கள் எங்கே??
மனது வலித்த போதெல்லாம்
கண்கள் எழுதிப்பார்த்த
உன் கடிதங்கள்
எங்கே

எங்கே போனது
என் கண்ணீரின் சாட்சிகள்

"அதெல்லாம் எதுக்கு
இனி அதெல்லாம் வச்சி
என்ன பண்ணப்போற"

என்னவென்று பதில் சொல்வது
இல்லை!?
என்ன உணர்ச்சி காட்டுவது!!?

எரிக்கப்பட்டுவிட்டதாம்.
உன் சம்பந்தப்பட்ட எல்லாமே
எனைத் தவிர.

- பிரேம் Posted by Picasa

8 Comments:

Blogger J S Gnanasekar said...

ஒரு காதலுக்குச் சாட்சிகளாக கடிதங்களையும், குறிப்பேடுகளையும் காட்டுவது, தாம்பத்திய வாழ்க்கைக்குச் சாட்சியாக ஒரு குழந்தையைக் காட்டுவதற்குச் சமம். (புரிந்ததா?)

பலர் பேர் கட்டைவிரல் வெட்டப்பட்டு, தாஜ்மஹால் சாட்சியாக இருப்பதில், உண்மைக் காதல் இல்லை. அதனுள் நுழைய முடியாமல், ஏங்கியே செத்துப் போனானே ஷாஜஹான், அதில்தான் உண்மைக் காதல் ஒளிந்திருக்கிறது. (புரிந்ததா?)

என் பாணியில் "உண்மைக் காதலுக்கு உருப்படியான சாட்சிகள் இருப்பதில்லை". (சாட்சியங்கள் இல்லாததால்தான் கடவுளர்களுக்குச் சாகாவரம்)

முகவரி மாறிப்போய், திரும்பவும் கல்வெட்டைத் தேடி வராதவர்களுக்கும், சாட்சியங்கள் எரித்தவர்களுக்கும் 'கல்வெட்டு' மற்றும் 'தல' ரசிகர் மன்றம் சார்பாக நன்றிகள்.

-ஞானசேகர்

12:28 PM  
Blogger நவீன் ப்ரகாஷ் said...

சந்தோஷப்படுங்க ! புது நோட்டுபுத்தகம்,புது முகவரி ஏன் புது இதயமே கிடைக்குமே!

எந்த மனசுமே அனாதை இல்லே!இல்லே ! தத்தெடுக்க பல மனசு காத்திட்டு இருக்கு மாமே !

1:16 PM  
Blogger தருமி said...

இந்தக் கவிதையெல்லாம் நமக்குத் தெரியாதுங்க. அந்தப் படம் பற்றிச் சொல்லுங்களேன்

10:22 PM  
Blogger sathesh said...

நன்றாக உள்ளது...

2:36 PM  
Blogger சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

Last paragraph is very good...

ippothaan padikkiriyA nu ketkathe..!

ippothAn comment podanumnu thonichchu...!

2:11 PM  
Blogger premkalvettu said...

அநாதையாக அலைகிறது
மனது
உன் முகவரி இல்லாமல்
---------------------------

எரிக்கப்பட்டுவிட்டது
உன் சம்பந்தப்பட்ட எல்லாமே
எனைத் தவிர
---------------------
This is how i thought of it first then there a doubt may arise why did i burnt it..so then it came along with the explanation also

6:00 PM  
Anonymous Anonymous said...

இன்றுதான் உங்கள் பதிவுகள்
பார்த்தேன்..
அழகான கவிதைகள்
அற்புதமான சிந்தனைகள்

நேசமுடன்..
நித்தியா

9:41 PM  
Blogger செல்வேந்திரன் said...

pakka final touch !!

8:20 PM  

Post a Comment

<< Home