இருட்டு
இருட்டு
என் செல்வமே...
வீட்டை விட்டு வந்தேனடி
விடிவு காண அன்று !
என் வாழ்க்கை விடிவதே
இரவில் தானடி !!
எவ்வாறு நெஞ்சில் ஈரமிருக்கும்
மனிதமிருகங்களுக்கு,
கொடுத்த பிறகு கொடுத்தார்கள்
உணவெனக்கு !
ஆம்!
என்னையே கொடுத்தபிறகு
கொடுத்தார்கள் உணவெனக்கு !!
நானும் ஒரு மனிதப்பிறவி தானடி
அந்த மரியாதை கூட எனக்கு
தர மறுப்பதேனடி !!
சந்தையிலே தீண்டத்தகாதவள் போல்
பொருளைத் தூக்கி எறிந்தானடி,
நேற்று என்னைத் தீண்டும் போது மட்டும்
அந்த எண்ணத்தைத் துறந்துவிட்டானடி !
என் இருட்டறையில் வளர்கின்ற
என் செல்வமே !
எந்த எழுத்தை இடுவேன் உன்
பெயருக்கு முன்னமே?
காந்தி நோட்டைப் பார்த்ததும்
நிம்மதியடைந்தேன்|
உன் அப்பன் பெயர் என்னவென்று
கேட்க மறந்தேன்.
நீ பிறப்பதற்கு முன்னமே
தெரிந்து கொண்டேன் செல்வமே !
நீயும் நானும் ஒன்றென்று.
நம் வாழ்வு இருட்டில்
தான் முடியுமென்று !!
பாவம் பெண்ணே நீ !
உனக்குத் தெரிந்திருக்க
வாய்ப்பில்லை
என் கருவறையில் உனக்குக்
கருமாதி நடக்குமென்று !!
மன்னித்துவிடு என் செல்வமே
வயிற்றை நான்
கழுவிக்கொள்கிறேன்.
இல்லையெனில்
என் வயிற்றைக் கழுவுவது கடினமடி.
நீ கொடுத்து வைத்தவள்
என் கண்ணே !
மூன்று மாதம் தானடி
உன் வாழ்வு இருட்டில்
வாழ்வே எனக்கு இருட்டில்தானடி !!
- பிரேம் குமார்.கி
என் செல்வமே...
வீட்டை விட்டு வந்தேனடி
விடிவு காண அன்று !
என் வாழ்க்கை விடிவதே
இரவில் தானடி !!
எவ்வாறு நெஞ்சில் ஈரமிருக்கும்
மனிதமிருகங்களுக்கு,
கொடுத்த பிறகு கொடுத்தார்கள்
உணவெனக்கு !
ஆம்!
என்னையே கொடுத்தபிறகு
கொடுத்தார்கள் உணவெனக்கு !!
நானும் ஒரு மனிதப்பிறவி தானடி
அந்த மரியாதை கூட எனக்கு
தர மறுப்பதேனடி !!
சந்தையிலே தீண்டத்தகாதவள் போல்
பொருளைத் தூக்கி எறிந்தானடி,
நேற்று என்னைத் தீண்டும் போது மட்டும்
அந்த எண்ணத்தைத் துறந்துவிட்டானடி !
என் இருட்டறையில் வளர்கின்ற
என் செல்வமே !
எந்த எழுத்தை இடுவேன் உன்
பெயருக்கு முன்னமே?
காந்தி நோட்டைப் பார்த்ததும்
நிம்மதியடைந்தேன்|
உன் அப்பன் பெயர் என்னவென்று
கேட்க மறந்தேன்.
நீ பிறப்பதற்கு முன்னமே
தெரிந்து கொண்டேன் செல்வமே !
நீயும் நானும் ஒன்றென்று.
நம் வாழ்வு இருட்டில்
தான் முடியுமென்று !!
பாவம் பெண்ணே நீ !
உனக்குத் தெரிந்திருக்க
வாய்ப்பில்லை
என் கருவறையில் உனக்குக்
கருமாதி நடக்குமென்று !!
மன்னித்துவிடு என் செல்வமே
வயிற்றை நான்
கழுவிக்கொள்கிறேன்.
இல்லையெனில்
என் வயிற்றைக் கழுவுவது கடினமடி.
நீ கொடுத்து வைத்தவள்
என் கண்ணே !
மூன்று மாதம் தானடி
உன் வாழ்வு இருட்டில்
வாழ்வே எனக்கு இருட்டில்தானடி !!
- பிரேம் குமார்.கி
1 Comments:
மிக அருமை ! பிரேம் !!
Post a Comment
<< Home