பனித்துளி
மிகச்சிறந்த கவிதைகள்
எழுதப்படுவதில்லை
உணரப்படுகின்றன
உனைப்போல.
----------------------
தவிக்கிறது மனது
இலையின் நுனியில்
பனித்துளி
----------------------
உன் பார்வைகள்
குத்தி பார்க்கின்றன
என் காதல்
உணர்ச்சிகளை
---------------------
உன்
கண்களில் தெரிகிறது
என் வேதனையின் அளவு.
-------------------------
என்றோ உன்
கண்ணீர் துளிகள் நனைத்த
சட்டை
ஈரமாகவே இருக்கிறது
இன்றும்.
-------------------
5 Comments:
varigal valiyin velipaadu.. nalla irrukku...
amaa ithai sollunga kavithaikku karuppu vannam podanumngirathu ennaiyaa Logic...
// என்றோ உன்
கண்ணீர் துளிகள் நனைத்த
சட்டை
ஈரமாகவே இருக்கிறது
இன்றும். //
கடலளவு கண்ணீர் போல... தேம்பி தேம்பி அழுதாங்களா...?
சும்மா தமாசுக்குத்தாங்க....:-)
கண்ணே கலங்காதே!
காதலன்
கையோடு
காவியமும்!
மெய்யோடு
பரிதாபமும்
உன்னைபோல!
சுவையான வரிகள்...
Naallla Lineeessss.... Njoi pannen tamizhaa...
Post a Comment
<< Home