Wednesday, September 07, 2005

காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு

யாராவது பார்த்தீர்களா?
இரண்டு நாட்களாக காணவில்லை
அவனை
அடையாளம் தானே கேட்கிறீர்கள்!!??

தனக்கான அடையாளத்தை
தேடித் தேடித்தானே
தொலைந்து போனான்
அவன்...!

வாழ்க்கையை
அவன் வாழவில்லை
அவன் வாழ்க்கையை
அவன்
வாழ்ந்ததில்லை!!!

ஒவ்வொரு முறையும்
உயிர்த்தெழுந்ததும்
எதிர்பார்ப்புகளின் சிலுவையில்
அறையப்படுகின்றன
இவன் ஆசைகள்...!

வாழலாம் என நினைத்தபோது
எதிர்பார்ப்புகள் வாழ்ந்திருந்தது
அவன்
நிகழ்காலத்தை!!??

சாவிற்கு பயப்படாத அவன்
வாழ்க்கை..
சாவதற்கு பயந்து
செத்து செத்து வாழ்ந்தது...!!

அவ்வப்போது
நிராகரிப்பும்
அலட்சியங்களும்
கருகலைப்பு செய்கின்றன
இவன் அடையாளங்களை...!!

கருகலைப்பு செய்யப்பட்டதில்
வழிந்த இரத்தத்தை
தானே துடைத்துக் கொண்டிருப்பான்
மெளனம் கொண்டு!!!
யாராவது பார்த்தால் சொல்லுங்களேன்.

- பிரேம்

1 Comments:

Blogger J S Gnanasekar said...

ஏன் காணாமல் போய்விட்டாய்?

நான் உன்னைத் தேடிக்கொண்டு இருக்கிறேன்.

3:14 PM  

Post a Comment

<< Home