சத்தமில்லாமல் வாசிக்கவும்
தனிமை..
தனிமை..
கண்ணுக்கெட்டிய தூரம்வரை
யாருமில்லை
நான் யார்?
அவசியமில்லாமல் போகிறது
முதன்முதலாக
நூற்றாண்டுகளின்
ஏக்கத்தோடு காத்திருக்கிறேன்
இந்த மழைக்காக
அறிந்தோ அறியாமலோ
படிந்து போன
நூற்றாண்டுகளின் கரையை
கழுவதற்காக
காத்திருக்கிறேன்
எப்போது நிகழ்ந்திருக்கும்?
வெற்றிக்காண காரணம் என்ன?
இன்று வரை அறியமுடியவில்லை
பண்பாட்டின் மீதான
படையெடுப்பு
ஆணாதிக்கத்தின்
அந்த வெற்றியில்தான்
நாட்டப்பட்டிருக்க வேண்டும்
கற்பின் கொடிகம்பம்
யோனியில்
தன் இருப்பை
உணர்த்திக் கொள்வதற்காக
திடிரென்று
நியமித்துக்கொண்டிருக்கிறது
பண்பாட்டு காவலர்களை
நான் நடந்துகொள்ளவேண்டிய
விதம்பற்றி
விவரணப் படம் எடுக்கப்படுகிறது
கலை இயக்குநரால்
கலைக்காகவே
கலைஞர்களை மட்டுமே நம்பி.
இரத்தங்களை சொட்டும்
வீச்சரிவாள்கள்
அது என் யோனியின் இரத்தம்
என்பதில் பெருமிதம் கொள்கின்றன..
நாளை மருத்துவர்களின்
முயற்சியால் இப்படி கூட நடக்கலாம்
"இலவச யோனி தைப்பு முகாம்"
அன்றைக்கும் கூட சன்னமாய் தான்
ஒலிக்கப்போகிறது
உங்கள் ஆண்குறிகளை கூட
வெட்டிக் கொள்ளலாம் எனும் குரல்.
பத்தவச்ச வத்திக்குச்சி
பக்கத்திலே குளிர்காய்கிறது..
சூரியனுக்கு முன் இதெல்லாம்...
என்றபடி எழுதுகிறது
"எனது அருமை உடன்பிறப்புக்களே".
அப்பாடா
கண்ணுக்கெட்டிய தூரம்வரை
யாருமில்லை
நான் யார் என்பது
தேவையும் இல்லை.
10 Comments:
கல்வெட்டு formக்கு வந்துட்டாரு.
கல்வெட்டு, நீ யாருன்னு (இக்கவிதையில் இடம்பெறும் நீ) நான் கண்டுபுடிச்சுட்டேன்னு நினைக்கிறேன். உன் பெயர், இதே கவிதையில் ஒருமுறை இடம்பெற்றிருக்கிறது சரியா? தப்புன்னா தப்புன்னு சொல்லிடு.
சத்தியமா புரியல. ஆனாலும் நல்லா இருக்கென்று சொல்வேன்.
-ஞானசேகர்
தப்புதான்:-)
ஆனா அதபத்தி பேசக்கூடாது சண்டைக்கு வருவாங்க அதனால தான் சத்தமில்லாமல் வாசிக்கவும் அப்படின்னு தலைப்பு
கடைசிக்கு முதல் பத்தி படிக்கும்போது
சேகரா...!!! நீ நினைத்ததையே(hope fully) நானும் நினைத்தேன்!!!
அந்தப் பத்தியைத் தவிர மற்றவற்றைப் படித்தபோது....
கவிதை வேறு வடிவில் முழுமை பெற்றிருந்தது.....
பிரேம குமாரா....!!!!
கட்டாயப்படுத்தாதே......
வார்த்தையையும்......
வாசகனையும்......
சத்தமில்லாமல் வாசிக்கவும்!
கருப்பை தீனியில்
மயக்கம் மீளாமல்,
இரத்தக் கலப்படம்
கலவி மறக்காமல்,
'கல்' ஆனாலும் கணவன்
விதியை ஏற்காமல்,
கண்டவர் மேல்
கனல் ஏவிப் போனால்
கடவுள் என்றானால்.....
சத்தமில்லாமல் வாசிக்கவும்!
சில நாட்கள் கொள்கை பிடித்து,
சில நாட்கள் உறவு கொண்டாட,
பல நாட்கள் நல்லது நம்பி,
ஒரே நாளில் விதி முடிவு செய்து,
நடுவிரல் நனைவுபட
நாழி நெருங்குவதால்.....
சத்தமில்லாமல் வாசிக்கவும்!
ஒரு கூட்டத்தின் ஹைப்போதலாமஸ்
ஒரே மூளையில் இருப்பதால்.....
சத்தமில்லாமல் வாசிக்கவும்!
ஆட்டுக் குடல்வாலில்
உயிர்தேக்கி வைக்க
விளம்பரம் ஆவதால்.....
சத்தமில்லாமல் வாசிக்கவும்!
சத்தமாய்ப் பேசுவதெல்லாம்
சத்தியமாய்ப் போனதால்.....
சத்தமில்லாமல் வாசிக்கவும்!
வகுத்த இலக்கணம்
தனியுடைமை என்றால்,
அதுவும் உன்னுடைமை என்றால்,
மற்றவன் எல்லாம்
இலக்கணமின்றி திரிந்தால்,
உங்கள் இலக்கணத்தை.....
சத்தமாக வாசிக்கவும்!
-ஞானசேகர்
என்ன கல்வெட்டு, நம்ம மட்டும்தான் பேசிக்கிட்டு இருக்கோம். தமிழ் கூறும் நல்லுலகில் இருந்து உனக்கு ஒரு கருத்தும் வரவில்லை.
ஒருவேளை உன் கவிதை யாருக்கும் பிடிபடவில்லை என நினைக்கிறேன். நீ சொன்னதையே, கடுஞ்சொற்கள் இல்லாமல் நானும் சொல்லிப் பார்த்தேன். படைப்பாளி வென்றுவிட்டான்; படைப்பு தோற்றுவிட்டது. ஜீன்ஸ் காலத்தில், கோவணத்தை நினைக்கச் சொன்னதால்தான் இப்படி?
படைப்பு ஜெயிக்க ஒரே வ்ழி, குழூஉக்குறி பாணியை விட்டுவிட்டு, அப்படியே சொல்வதுதான். நீ என்ன சொல்கிறாய்?
நல்ல படைப்புகளை அறிந்து கொள்ள ஒரே அடையாளம், அவை எல்லாம் தோற்ற படைப்புகள்.
நம் ஹைப்போதலாமஸ், நமது தலையிலேயே இருப்பதால், மூளை சொல்லத்தான் துடிக்கும் இதயமும்!
-ஞானசேகர்
//நாளை மருத்துவர்களின்
முயற்சியால் இப்படி கூட நடக்கலாம்
"இலவச யோனி தைப்பு முகாம்"
அன்றைக்கும் கூட சன்னமாய் தான்
ஒலிக்கப்போகிறது
உங்கள் ஆண்குறிகளை கூட
வெட்டிக் கொள்ளலாம் எனும் குரல்//
கல்வெட்டு, நிகழ்கால தீர்க்கத்தரிசியா நீ?
சொல்லி, 95 நாள்கூட ஆகவில்லை. நீ சொன்னது நடந்திருச்சுய்யா. அதுவும் நம்ம ஊருலேயே? உலகமகா தீர்க்கதரிசியா நீ!
ச்சே. யாரு யாருக்கு எல்லாமோ, லட்சக்கணக்குல கூடுறாங்க. அமைதி காவலர்ங்குறாங்க. (மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!!!!!!!!!!!!!!!!!!!!!)
இப்ப புரியுதா கல்வெட்டைப் பற்றி, போகி எழுதிய கவிதை?
சரி அடுத்த பதிவு????????
-ஞானசேகர்
great work man..read my blog if u have time...
great work man..read my blog if u have time...
good..
good.. keep up ur nice work..
Post a Comment
<< Home